சிலரின் நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவது ஏன்?
சிலரின் நோய்களைக் குணப்படுத்த முடியாமல் போவது ஏன்? ஒரு மனிதனுக்கு நோய் உருவாக பல்வேறு காரணங்கள் உள்ளன. உடலின் கழிவு தேக்கத்தாலும் வாழ்க்கை முறை தவறுகளாலும் ஆற்றல் பற்றாக்குறையினாலும் உருவாகும் நோய்களை சரியான மருத்துவம் செய்தால் குணப்படுத்திவிட முடியும்.
ஒரு மனிதனின் பிறப்பின் நோக்கமாகவும் (விதி), அவன் அனுபவிக்க வேண்டிய கர்மாக்களின் (கர்மா) பலனாகவும் நோய் உருவானால் அதனை மனிதர்கள் சரி செய்ய முடியாது.
அவன் அந்த நோயை அனுபவிக்க வேண்டிய கால அவகாசம் முடியும்போது அந்த நோய் தானாகவே குணமாகிவிடும் அல்லது மரணம் அந்த மனிதனை தழுவிக் கொள்ளும்.
