இறைவன் அநியாயங்களைத் தடுக்காமல் இருப்பது ஏன்?
இறைவன் அநியாயங்களைத் தடுக்காமல் இருப்பது ஏன்? இறைவன் பற்றற்றவர், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவர். இறைவன் பிரபஞ்சத்தையும், இந்த பூமியையும், இந்த பூமியின் படைப்புகளையும், உயிரினங்களையும், சிருஷ்டித்து, பின் தனது படைப்பை நிறுத்திக்கொண்டார்.
சிருஷ்டித்தப்பின், இந்த உலகில் நடக்கும் எந்த விஷயத்திலும் அவர் தலையிடுவதில்லை. இந்த பூமியில் நல்லவர்களுக்கும் தீயவர்களுக்கும் சம உரிமை உள்ளதால், நல்லதும் கெட்டதும் நடந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் யாருடைய செயலிலும் இறைவன் தலையிடுவதில்லை.
