எதனால் பிறப்பு இறப்பு உண்டாகிறது?

 

எதனால் பிறப்பு இறப்பு உண்டாகிறது? ஆன்மாக்கள், அன்பு, நிம்மதி, மகிழ்ச்சி, போன்ற உலக இன்பங்களை அனுபவம் செய்வதற்காக மனிதர்களாக இந்த பூமியில் பிறக்கிறார்கள்.

இந்த உலக வாழ்க்கை அனுபவங்களை பெறுவதற்காக பிறந்த ஆன்மாக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறுகளைச் செய்து பிறப்பு இறப்பு எனும் மாய சுழற்சியில் சிக்கிக் கொள்கிறார்கள்.

சுதந்திரமாக பறக்க வேண்டிய ஒரு பறவை சில நெல் மணிகளுக்கு ஆசைப்பட்டு ஒரு கூண்டில் அடைபட்டுக் கிடப்பதைப் போன்று ஆன்மாக்களும், மன இச்சைகளுக்கு கட்டுப்பட்டு இந்த உலகில் அடைபட்டுக் கிடக்கின்றன.

மேலும் அந்த ஆன்மாக்கள் செய்யும் தவறுகள், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவிப்பதற்கு காரணமாக அமைகின்றன.

To Top