டாக்டர் பாட்ச் மலர் மருத்துவம்
டாக்டர் பாட்ச் மலர் மருத்துவம் (Bach Flower Medicine) என்பது இயற்கையில் விளைந்திருக்கும் பல்வேறு வகையான மலர்களையும், நதி நீர், பனி, போன்ற மற்ற சில இயற்கையான விசயங்களையும் பயன்படுத்தி, மனிதர்களின் மனநலனைச் சீர் செய்யும் மருத்துவ முறையாகும்.
இம்மருத்துவ முறை 1930-களில் பிரிட்டிஷ் – ஆங்கில மருத்துவரான டாக்டர் எட்வர்ட் பாட்ச் (Dr. Edward Bach) அவர்களால் உருவாக்கப்பட்டது. மனிதர்களின் மனநலம் மற்றும் உணர்வுகளின் சமமின்மையை சீர்செய்வதற்காக மலர்களின் சாரங்களைப் பயன்படுத்தும் இம்முறையானது, உலகம் முழுவதும் பிரபலமடைந்து பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
